கலாத்திய நாட்டில் உள்ள சபைகளுக்கு, மனிதர்களாலோ, மனிதன் வழியாகவோ ஏற்படுத்தப்படாமல், இயேசு கிறிஸ்துவினாலும், அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்த பரம தந்தையாகிய கடவுளாலும் அப்போஸ்தலனாய் ஏற்படுத்தப்பட்ட சின்னப்பனாகிய யானும்,
கிறிஸ்துவின் அருளால் உங்களை அழைத்தவரை விட்டு விட்டு, இவ்வளவு குறுகிய காலத்தில், வேறொரு நற்செய்தியைப் பின்பற்றப் போய்விட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.
ஏற்கனவே சொல்லியிருக்கிறோம், இப்பொழுது திரும்பவும் சொல்லுகிறேன்: நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தினின்று வேறானதொன்றை எவனாவது உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்படுக!
இப்படி நான் சொல்லும்போது, நான் தேடுவது மனிதருடைய நல்லெண்ணமா, கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால், நான் கிறிஸ்துவின் ஊழியனாய் இருக்கவே முடியாது.
மனிதனிடமிருந்து நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை,. எந்த மனிதனும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாட்டின் வழியானவே அந்நற்செய்தி எனக்குக் கிடைத்தது.
ஒரு காலத்தில் நான் யூத மறையைப் பின்பற்றியபொழுது, என்ன செய்து வந்தேன் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கடவுளின் திருச்சபையை எவ்வளவோ துன்புறுத்தி, ஒழிக்க முயன்றேன்.
தம் மகனைப் பற்றிய நற்செய்தியை நான் புறவினத்தார்க்கு அறிவிக்கும்படி, அம்மகனை எனக்குள் வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதனிடமும் போய்க் கலந்து ஆலோசிக்காமல்,
ஒரு காலத்தில் நம்மைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தைப் போதித்து இப்பொழுது நற்செய்தி அறிவிக்கிறான் என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர்.